இயக்குநர் உரை
முதன்மையான சட்ட நிறுவனமான சட்டக் கல்வி இயக்குநரகம் என்பது தமிழ்நாட்டில் சட்டக் கல்வி அமைப்பில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இது தமிழ்நாட்டில் சட்டக் கல்லூரிகளை நிர்வகிப்பது மற்றும் சட்டக் கல்வி தரத்தை மேம்படுத்துவது என்ற இரட்டை நோக்கத்துடன் 1953 – ஆம் ஆண்டு நிறுவப்பட்டு அதற்கான புதிய கொள்கைகளையும் விதிமுறைகளையும் கொண்டுவந்தது. இத்துறை உருவாக்கம் என்பது தமிழ்நாட்டின் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு மேம்பட்ட சட்டக் கல்வியினை வழங்க வழிவகுத்தது. இத்துறையானது தமிழக அரசு, நீதித்துறை, இந்திய வழக்குரைஞர்கள் கழகம், பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் கழகம் இவற்றின் தொடர்ச்சியான ஆதரவோடு மாநிலத்தின் சட்டக் கல்வியில் தரத்திலும் எண்ணிக்கையிலும் உயர்ந்த இடத்தினை எட்டியுள்ளது.
இத்துறையானது வழக்குரைஞர்கள், நீதித்துறை மற்றும் சமூகம் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய சட்டக் கல்லூரிகளை உருவாக்குகிறது.
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட, நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் பழமையான மெட்ராஸ் சட்டக் கல்லூரி ஒன்று மட்டுமே 1974 ஆம் ஆண்டு வரை அதாவது மதுரை சட்டக் கல்லூரி துவங்கப்படும் வரை இயங்கிய ஒரே சட்டக் கல்லூரியாகும். 1979 – ஆம் ஆண்டு அரசு சட்டக் கல்லூரி திருச்சிராப்பள்ளி மற்றும் அரசு சட்டக் கல்லூரி கோயம்புத்தூர் துவங்கப்பட்டன. அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி 1996 -1997- ஆம் கல்வியாண்டில் துவங்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் இயக்கி வந்த சட்டக் கல்லூரி செங்கல்பட்டு, என்பது தமிழக அரசின் அரசாணை (நிலை) எண்.299, நாள். 05-12-2006 – ஆம் நாளிட்ட சட்ட(சக)த்துறை அரசாணை வெளியிட்டதன் மூலமாகவும் 2008 – 2009 கல்வியாண்டில் அரசு சட்டக் கல்லூரி வேலூர் முதலியன துவங்கப்பட்டன. 2017 –ஆம் ஆண்டு விழுப்புரம், இராமநாதபுரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மூன்று சட்டக் கல்லூரிகள் துவங்கப்பட்டு இயங்கி வருகின்றன மற்றும் 2020 –ஆம் ஆண்டு கூடுதலாக தேனி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் சட்டக் கல்லூரிகள் துவங்கப்பட்டன. தற்போது சட்டக் கல்வி இயக்குநரகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் 14 அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் விழுப்புரத்தில் தேசிய சட்டப் பணிகளுக்கு அதிநவீன வசதியுடன் கூடிய உள்கட்டமைப்புகள் கொண்ட கட்டடத்தில் கல்லூரி இயங்கி வருகிறது. பல பயன் அட்டை (Smart Card) உபயோகம் கொண்ட நுழைவு வாயிலுடன் கூடிய கட்டமைப்பு வசதியினைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற வசதிகளுடனான அரசு சட்டக் கல்லூரி மற்ற மாவட்டங்களிலும் கொண்டு வருவதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு நிர்வாக அமைப்பாக, இச்சட்ட இயக்குநரகத்தின் முக்கிய நோக்கம் என்பது இந்திய வழக்குரைஞர்கள் கழகத்தின் தேவைகளின்படி, சட்ட நிறுவனத்தினை சித்தப்படுத்துவதேயாகும். அதற்கேற்றவாறு மாநிலத்திலுள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளும், பல்கலைக் கழக மானியக்குழுவின் 12B அங்கீகாரத்தினைப் பெறவுள்ளன. புதிதாக துவங்கப்பட்ட ஏழு அரசு சட்டக் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானியக்குழுவின் 12B அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது மற்றும் மீதமுள்ள ஏழு சட்டக் கல்லூரிகளுக்கு இந்த அங்கீகாரம் கிடைப்பதற்கான செயற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது அனைத்து சட்டக் கல்லூரிகளும் அவற்றின் சொந்த கட்டடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் அரசு சட்டக் கல்லூரி, வேலூர் விரைவில் மிக்க வசதியுடன் புதிய கட்டடத்தினை பெறவுள்ளது. அனைத்து கல்லூரிகளும் அடிப்படை உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன மற்றும் ஊழியர் வலிமையிலும் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் நூலகங்களில் ஏராளமான எண்ணிக்கையிலான புத்தகங்கள், மின் பகுதி இணைப்புடனான பத்திரிக்கைகள், முதலியவற்றைக் கொண்டுள்ளது. முதன்மையான இந்திய மற்றும் சர்வதேச தரவு தளங்களை இலவசமான அணுகுவதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் மின் பகுதி வழங்குகிறது. இவ்வாறாக அருகலை (Wi-Fi) மூலமாக சட்டப் பொருள் விளக்கங்களைப் பெற முடியும்.
அனைத்து சட்டக் கல்லூரிகளும் தற்போது நடைமுறை சட்டக் கல்வியினை கண்டிப்பாக கடைப்பிடித்து வருவதனால் மாணவர்களும் நீதிமன்ற ஒழுங்குமுறைகளை ஈடுபாட்டுடன் ஏற்று சிறப்பு ஆடை விதிகளை மேற்கொள்கின்றனர். இது மாணவர்களிடையே, சட்டப் புலத்தினில் எந்த செயலையும் நிறைவேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை வளர ஏதுவாகிறது. மாணவர்கள் ஒருமாத காலம் வழக்கறிஞர் அரங்கிற்குச் சென்று பயிற்சி மேற்கொள்கின்றனர் மற்றும் வழக்கறிஞர் தரப்பினரை கையாளும் நெறிமுறைகளையும், நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க தயாராகும் முறைகளையும் கவனிக்கின்றனர். இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் கல்வி காலத்தின் போதே மாதிரி நீதிமன்றங்களில் பங்கு பெறுவதன் மூலம் வழக்குரைஞர் போல செயல்பட சித்தப்படுத்தப்படுகிறார்கள். இப்பயன்பாட்டிற்காகவே அனைத்து கல்லூரிகளிலும் புதிய மாதிரி நீதிமன்ற அரங்குகள் வழக்கமான நீதிமன்ற அரங்கு போல் அமைக்கப்பட்டுள்ளன. இவை மாணவரின் விவாதிக்கும் திறனை ஊக்குவித்து தன்னை ஒரு நல்ல வழக்குரைஞராக வடிவமைக்க உதவுகிறது. இத்துடன் நடைமுறை சட்டக் கல்வியின் ஒரு பகுதியாக சட்டப் பூர்வமாக நீதிமன்றத்திற்கு வெளியில் தகராறிற்கான தீர்வு காணும் வழிமுறை மற்றும் நீதிமன்றங்களில் வழக்குப் பதிவுப் பட்டியல் அதிகரிப்பதை குறைக்கும் நோக்குடன் செயல்படும் மாற்றுவழி தீர்வுமுறை மன்றங்களை மாணவர்கள் பயனுள்ள வகையில் கவனித்து வருகின்றனர்.
சட்டம் பயிலும் மாணவர் எப்பொழுதும் சமூக விழிப்புணர்வுடனும் மற்றும் எப்பொழுதும் சமுதாயத்தின் மேம்பட்ட நலனுக்காக பாடுபடுபவர்களாகவும் உள்ளனர். ஆகையால் அவர்கள் அடிக்கடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அது வன்முறையாக முடியலாம் ஆனால் பின்னர் தங்களது வீட்டிற்கும் சமூகத்திற்குமான பொறுப்பினை உணர்கின்றனர். தற்போது அமைதியில் நம்பிக்கை கொண்டும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் இளைப்பாறுகின்றனர். எனவே பெரிய அளவில் வேலை நிறுத்தங்கள் குறைக்கப்பட்டது மற்றும் கல்வியில் கவனம் செலுத்தப்பட்டது. இத்துறையும் சட்டக் கல்வியின் தரத்தினை மிகப் பெரிய அளவில் மேம்படுத்துவதில் தனது கவனத்தினை செலுத்தி வருகிறது.
மாணவர்களை ஊக்குவிக்கும்படியான சமூக விழிப்புணர்வை வளர்த்தல் மற்றும் மாறுதலில்லாத படிப்பிலிருந்து விலக்களித்தல் விதமாக தற்போது சட்டக் கல்லூரி வளாகங்களில் பல்வேறு விதமான விழாக்களைக் கொண்டாடி வரப்படுகின்றன. (பொங்கல் மற்றும் கலாச்சார விழாக்கள், மகளிர் தினம் போன்ற) இத்துடன் ஆலோசனைக் கூட்டம், கருத்துக் கோவை, கருத்தரங்கு, பயிற்சிப்பட்டறை பேரணி போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் சமுதாயத்திற்கு நம்பமுடியாத இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அரசு சட்டக் கல்லூரிகளின் இன்றைய சூழல் இதற்கு முன் இருந்த சட்டக் கல்லூரிகளின் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. எந்த சூழலுக்கும் ஏற்றவாறு சட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து சிறந்த சட்டம் பயின்ற மாணவர்களை உருவாக்கும் பணியில் பேராசிரியர்களின் அர்பணிப்பும் உதவியாக உள்ளது.
சமாதானம் மற்றும் அமைதியை நிலைநாட்டவும், தரமான சட்டக் கல்வியை மாணவர்களுக்கு வழங்கி அவர்களை இந்தியாவின் சிறந்த குடிமகன்களாக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட உறுதுணையாக இருந்த அரசு, மதிப்பிற்குரிய சட்ட செயலர், முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் இத்துறையானது நன்றியினை இச்செய்தி மூலம் இத்துறை தெரிவித்துக் கொள்கிறது.