இயக்குநர் உரை

சட்டக் கல்வி இயக்ககம் தமிழ்நாட்டில் சட்டக் கல்வி அமைப்பில் முக்கிய
மாற்றங்களைக் கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளை
நிர்வகிப்பது மற்றும் சட்டக் கல்வி தரத்தை மேம்படுத்துவது என்ற இரட்டை
நோக்கத்துடன் சட்டக் கல்வி இயக்ககம் 1953 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு,
அதற்கான புதிய கொள்கைகளையும் விதிமுறைகளையும் கொண்டு வந்தது.
இத்துறையின் உருவாக்கம் தமிழ்நாட்டின் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு
மேம்பட்ட சட்டக் கல்வியினை வழங்க வழிவகுத்தது. இத்துறையானது தமிழக அரசு,
நீதித்துறை, இந்திய வழக்குரைஞர் மன்றம், பல்கலைக் கழக மானியக்குழு மற்றும்
தமிழ்நாடு வழக்குரைஞர் மன்றம் ஆகியவற்றின் தொடர்ச்சியான ஆதரவோடு
மாநிலத்தின் சட்டக் கல்வி தரத்திலும் எண்ணிக்கையிலும் உயர்ந்த இடத்தினை
எட்டியுள்ளது.

இத்துறையானது வழக்குரைஞர்கள், நீதித்துறை மற்றும் சமூகம் ஆகியவற்றின்
தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாட்டின்
பல்வேறு பகுதிகளில் புதிய அரசு சட்டக் கல்லூரிகளை உருவாக்குவதற்கு
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட, நூற்று
இருபத்தைந்து ஆண்டுகள் பழமையான மெட்ராஸ் சட்டக் கல்லூரி ஒன்று மட்டுமே
1974 ஆம் ஆண்டு வரை அதாவது மதுரை சட்டக் கல்லூரி துவங்கப்படும் வரை
இயங்கிய ஒரே சட்டக் கல்லூரியாகும். 1979 – ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி அரசு
சட்டக் கல்லூரி மற்றும் கோயமுத்தூர் அரசு சட்டக் கல்லூரிகள் துவங்கப்பட்டன.
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி, 1996 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்டு வந்த செங்கல்பட்டு
சட்டக் கல்லூரி அரசாணை (நிலை) எண்.299, சட்டத் (சக) துறை, நாள். 05-12-2006 –
இல் அரசு சட்டக் கல்லூரியாக மாற்றப்பட்டது. 2008 –ஆம் ஆண்டில் வேலூர் அரசு
சட்டக் கல்லூரி துவங்கப்பட்டது. 2017 –ஆம் ஆண்டு விழுப்புரம், இராமநாதபுரம்
மற்றும் தருமபுரி ஆகிய இடங்களில் மூன்று அரசு சட்டக் கல்லூரிகள் துவங்கப்பட்டு
இயங்கி வருகின்றன. 2020 –ஆம் ஆண்டு கூடுதலாக தேனி, சேலம் மற்றும் நாமக்கல்
ஆகிய இடங்களிலும் அரசு சட்டக் கல்லூரிகள் துவங்கப்பட்டன. 2022-ஆம் ஆண்டில்
காரைக்குடியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி துவங்கப்பட்டது. தற்போது சட்டக்
கல்வி இயக்ககத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் 15 அரசு சட்டக் கல்லூரிகள்
உள்ளன.

ஒரு நிர்வாக அமைப்பாக, இச்சட்டக் கல்வி இயக்ககத்தின் முக்கிய நோக்கம்
என்பது இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் வரைமுறைகளின்படி, அரசு சட்டக்
கல்லூரிகளை மேம்படுத்துவதே ஆகும். அதற்கேற்ப, மாநிலத்திலுள்ள அனைத்து அரசு
சட்டக் கல்லூரிகளும், பல்கலைக் கழக மானியக்குழுவின் 12B அங்கீகாரத்தினைப்
பெறவுள்ளன. அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளும் அடிப்படை
உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது மட்டுமின்றி, ஊழியர் வலிமையிலும் மிகப்
பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசு சட்டக் கல்லூரி
நூலகங்களில் ஏராளமான எண்ணிக்கையிலான புத்தகங்கள், ஆராய்ச்சி கட்டுரைகள்

மற்றும் அதிவேக இணையத்துடன் கூடிய மின் மண்டலங்கள் உள்ளன. இதன் மூலம்
மாணவர்கள் முதன்மையான இந்திய மற்றும் சர்வதேச தரவு தளங்களை இலவசமான
அணுகவும், பதிவிறக்கம் செய்திடவும், சட்டப் பொருள் விளக்கங்களைப் பெற்றிடவும்
இயலும்.

அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளும் தற்போது நடைமுறை சட்டக்
கல்வியினை கண்டிப்பாக கடைப்பிடித்து வருவதால், மாணவர்களும் நீதிமன்ற
ஒழுங்குமுறைகளை ஈடுபாட்டுடன் ஏற்று சிறப்பு ஆடை விதிகளை
மேற்கொள்கின்றனர். இது மாணவர்களிடையே, சட்டப் புலத்தினில் எந்த செயலையும்
நிறைவேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை வளர ஏதுவாகிறது. மாணவர்கள் ஒரு மாத
காலம் வழக்கறிஞர் அலுவலத்திற்குச் சென்று பயிற்சி மேற்கொள்கின்றனர் மற்றும்
வழக்குகளை கையாளும் நெறிமுறைகளையும், நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க
தயாராகும் வாத முறைகளையும் கவனிக்கின்றனர். இறுதியாண்டு மாணவர்கள்
தங்கள் கல்வி காலத்தின் போதே மாதிரி நீதிமன்றங்களில் பங்கு பெறுவதன் மூலம்
நல்ல வழக்குரைஞர்களாகப் பணியாற்றுவதற்கு தேவையான பயிற்சிகளைப்
பெறுகின்றனர். இப்பயன்பாட்டிற்காகவே அனைத்து கல்லூரிகளிலும் புதிய மாதிரி
நீதிமன்ற அரங்குகள் வழக்கமான நீதிமன்ற அரங்கு போல் அமைக்கப்பட்டுள்ளன.
இவை மாணவர்களின் விவாதிக்கும் திறனை ஊக்குவித்து, அவர்களை ஒரு நல்ல
வழக்குரைஞராக வடிவமைக்க உதவுகிறது. இத்துடன் நடைமுறை சட்டக் கல்வியின்
ஒரு பகுதியாக சட்டப் பூர்வமாக நீதிமன்றத்திற்கு வெளியில் தகராறிற்கான தீர்வு
காணும் வழிமுறை மற்றும் நீதிமன்றங்களில் வழக்குப் பதிவுப் பட்டியல் அதிகரிப்பதை
குறைக்கும் நோக்குடன் செயல்படும் மாற்றுவழி தீர்வுமுறை மன்றங்களை
மாணவர்கள் பயனுள்ள வகையில் கவனித்து வருகின்றனர்.

சட்டம் பயிலும் மாணவர் எப்பொழுதும் சமூக விழிப்புணர்வுடனும் மற்றும்
எப்பொழுதும் சமுதாயத்தின் மேம்பட்ட நலனுக்காக பாடுபடுபவர்களாகவும்
உள்ளனர். ஆகையால் அவர்கள் அடிக்கடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அது
வன்முறையாக முடியலாம் ஆனால் பின்னர் தங்களது வீட்டிற்கும் சமூகத்திற்குமான
பொறுப்பினை உணர்கின்றனர். தற்போது அமைதியில் நம்பிக்கை கொண்டும்,
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் இளைப்பாறுகின்றனர்.
எனவே பெரிய அளவில் வேலை நிறுத்தங்கள் குறைக்கப்பட்டது மற்றும் கல்வியில்
கவனம் செலுத்தப்பட்டது. இத்துறையும் சட்டக் கல்வியின் தரத்தினை மிகப் பெரிய
அளவில் மேம்படுத்துவதில் தனது கவனத்தினை செலுத்தி வருகிறது.

மாணவர்களை ஊக்குவிக்கும்படியான சமூக விழிப்புணர்வை வளர்த்தல் மற்றும்
மாறுதலில்லாத படிப்பிலிருந்து விலக்களித்தல் விதமாக தற்போது சட்டக் கல்லூரி
வளாகங்களில் பல்வேறு விதமான விழாக்களைக் கொண்டாடி வரப்படுகின்றன.
(பொங்கல் மற்றும் கலாச்சார விழாக்கள், மகளிர் தினம் போன்ற) இத்துடன்
ஆலோசனைக் கூட்டம், கருத்துக் கோவை, கருத்தரங்கு, பயிற்சிப்பட்டறை பேரணி
போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதன்
மூலம் சமுதாயத்திற்கு நம்பமுடியாத இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அரசு சட்டக் கல்லூரிகளின் இன்றைய சூழல் இதற்கு முன் இருந்த சட்டக்
கல்லூரிகளின் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. எந்த சூழலுக்கும் ஏற்றவாறு
சட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து சிறந்த சட்டம் பயின்ற மாணவர்களை
உருவாக்கும் பணியில் பேராசிரியர்களின் அர்பணிப்பும் உதவியாக உள்ளது.

சமாதானம் மற்றும் அமைதியை நிலைநாட்டவும், தரமான சட்டக் கல்வியை
மாணவர்களுக்கு வழங்கி அவர்களை இந்தியாவின் சிறந்த குடிமகன்களாக உருவாக்க
வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட உறுதுணையாக இருந்த
அரசு, மதிப்பிற்குரிய சட்ட செயலர், முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப்
பணியாளர்கள் அனைவருக்கும் இத்துறையானது நன்றியினை இச்செய்தி மூலம்
இத்துறை தெரிவித்துக் கொள்கிறது.

பேரா.(முனைவர்).ஜெ.விஜயலட்சுமி, எல்எல்.எம்., பிஎச்.டி.,
சட்டக் கல்வி இயக்குநர்.

Latest News

Thrilled to announce that Chennai Dr.Ambedkar Government Law College has been ranked 8th in the prestigious IIRF rankings and clinched the 1st position in our state!
Click here to view

Latest News

Thrilled to announce that Chennai Dr.Ambedkar Government Law College has been ranked 8th in the prestigious IIRF rankings and clinched the 1st position in our state!
Click here to view

Skip to content